துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற உலகின் உயரமான கட்டிடத்தில் இந்திய மூவர்ண தேசிய கொடி வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யப் பட்டுள்ளது இந்திய நாட்டையே பெருமைபட வைத்துள்ளது.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டிற் காகன குடியரசு தின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதனை முன்னிட்டு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா இந்திய மூவர்ண தேசிய கொடியை எல்.இ.டி.விளக்கு களால் அலங்கரிக்கப் பட்டு உள்ளது.
இந்த அலங்காரம் இன்று மற்றும் நாளை ஒளிர்விக்கப் படுகிறது. இத்தகவலை புர்ஜ் கலிபாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
புர்ஜ் கலிஃபா கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரத்தில் உருவாக்கப் பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.