கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோடகமா ஜெயிலில் நேற்று முன்தினம் இரவு கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வினாயக் கர்போத்கர் என்ற கைதி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த மோதலை பயன்படுத்தி 49 கைதிகள் தப்ப முயன்றனர். அவர்களை ஜெயிலில் உள்ள போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது நடந்த தாக்குதலில் ஜெயிலர், 2 போலீசார் மற்றும் 9 கைதிகள் காயம் அடைந்தனர்.
எனினும் கைதிகள் தப்ப மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி சந்தன் சவுத்ரி கூறுகையில்,
கோவா ஜெயிலில் கைதி ஒருவரை கொன்ற வினாயக் கர்போத்கரை மராட்டிய மாநில ஜெயிலில் அடைக்க முயற்சி எடுத்தோம்.
ஆனால் மராட்டிய அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவரை அதே ஜெயிலில் வைத்திருந்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி வாஸ்கோடகமா ஜெயிலில் அடைத்தோம்.
அவரை நேற்று முன்தினம் இரவு சில கைதிகள் தாக்கி குத்திக் கொன்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து சில கைதிகள் தப்ப முயன்றனர். அவர்களின் முயற்சியை முறியடித்து விட்டோம் என்றார்.