கடந்த ஆண்டுகளாக தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்த மகளின் நடவடிக்கையால் தனது மனம் மிகவும் உடைந்து போயுள்ளது என தாயார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது இளம் வயது மகள் அவள் தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளாள்.
தான் என்ன செய்கிறோம் என்பதை கூட அறியாத நிலையில், அவள் இதனை செய்து கொண்டிருக்கிறாள்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தந்தை மகள் உறவில் தான் இருக்கிறார்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்தேன்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் காதல் தொடர்பான குறுஞ்செய்திகளை ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்பி கொள்வது,
பரிசுப் பொருட்களை மாற்றிக் கொள்வது என காதல் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தனர்.
கடந்த சில ஆண்டாக இது நடந்து வருகிறது. இதனை அறிந்த பின்னர் எனது நிம்மதியே போய் விட்டது.
இந்த உறவினை நிறுத்திக் கொள்ளுங்கள் என பல முறை அவர்களிடம் எடுத்துக் கூறியும் அதனை கேட்க மறுக்கின்றனர்.
இந்த உறவால் நான் தரம் தாழ்த்தப் பட்டுள்ளேன், மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. பொருளாதாரத்திற்காக எனது கணவரை சார்ந்து வாழ்ந்து வந்த நான், தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டேன்.
தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை என மனம் உடைந்து போயுள்ளார்.
இந்த அனைத்து வியடங்களையும் கூறிய இப்பெண், இவர் தனது மகளின் சொந்த தந்தை கிடையாது என்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நான், இவரை சார்ந்து வாழ்ந்தேன்.
ஆனால், இந்த உறவால் எனது மகளை இழந்ததோடு இல்லாமல், தங்குவதற்கு வீடு இன்றியும் தவித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
இவருக்கு ஆறுதல் கூறியுள்ள, இப்பெண்ணின் தோழி ஒருவர், உனது மோசமான சூழ்நிலை பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ள நீ, உனக்கென ஒரு தொழிலை உருவாக்கி கொண்டு, உனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு வாழ்வதற்கு முயற்சி செய்.
மேலும், உனக்கு மன ஆலோசனை தேவைப்படுகிறது. எனவே ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது என கூறியுள்ளார்.