அரசை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் சசிகலா அணி !

மாநில அரசை தங்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வர உளவு வேலை பார்க்கும் வேலையை சசிகலா அணி செய்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை உளவு பார்க்கிறார்கள்.
அரசை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் சசிகலா அணி !
முதல்வரை நிழல் போல் தொடர ஆட்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உளவு வேலை குறித்த தகவலை தலைமை செயலக வட்டாரங்கள் உறுதி படுத்துகின்றன.
.
முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை மட்டுமே உளவு பார்க்க விசேஷமாக ஆட்களை வைத்திருக்கிறதாம் சசிகலா கோஷ்டி. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கைப்பற்றி விடலாம் என கனவு கண்டது சசிகலா கோஷ்டி.

ஆனால் மத்திய அரசோ ஓ. பன்னீர் செல்வத்தை முதல்வர் நாற்காளியில் அமரவைத்து, அவர் மூலமாக சசி தரப்புக்கு செக் வைத்தது.

இதனால் மத்திய பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது சசி கோஷ்டி. இந்நிலையில் தான் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக கண்காணிக்கும் பணியை சசி கோஷ்டி மேற்கொண்டிருக்கிறது.
அதற்காக தலைமைச் செயலகத்திலும், பெரிய குளத்திலும் தனியாக பல அதிகாரிகளை ஏவி விட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட மத்திய அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார். இது தமிழக அரசின் உளவுத் துறைக்கே சில மணி நேரம் கழித்து தான் தெரிய வந்ததாம்.

ஆனால் மன்னார்குடி கோஷ்டிக்கு உடனே இந்த தகவல் பாஸ் செய்யப் பட்டிருக்கிறது. அவர்களும் என்னவோ ஏதோவென்று அரண்டு போயிரு க்கிறார்கள். 

பின்னர் தான் மத்திய அரசு அதிகாரி வந்தது வேறொரு விஷயமாக என அறிந்து அமைதியாகினர்.

இது போன்ற மத்திய அரசு சார்பான முதல்வர் சந்திப்பு எது நடந்தாலும் சசி கோஷ்டி திக் திக்கென்று ஆகிவிடுகிறதாம். ஏதோ இவர்கள் நியமித்திருக்கும் உளவு பார்க்கும் பார்டிகளால் திக்திக்காவது ஏற்படுத்தப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings