ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக் கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர்.
ஆனால் இந்த போராட்டத்டை கொச்சைப்படுத்தும் வகையில் பீட்டா நிர்வாகி ராதாராஜன், இலவச செக்ஸ் என்றால் கூட தான் அதிகமாக கூட்டம் கூடுவார்கள் என்று கீழ்த்தரமாக கூறியிருந்தார்.
இவருடைய கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் குறிப்பாக பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்
பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி தனது சமூக வலைத் தளத்தில் கூறியபோது,
திருமதி ராதாராஜன் அவர்களே, உங்கள் வயதுக்கு இது போல பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். அறவழியில் போராடும் மாணவர்களை மதிக்க வேண்டும், இது போன்று பேசுவது தவறானது என்று பதிவு செய்துள்ளார்.
டிடியின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவு கிடைத் துள்ளது.