தமிழகத்தைச் சேர்ந்த சண்முக நாதனின் ஆளுநர் பதவிக்கு ஆப்பு வைத்த பெண்ணின் புகார். வேலைக்கு நேர்காணல் வந்த தன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார் என காவல் துறையில் அவர் புகார் அளித் துள்ளார்.
ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வில்லை. இந்த சம்பவம் டிசம்பர் 8 ஆம் தேதி நடை பெற்றுள்ளது. ஆனால் வெளி உலகிற்கு ஜனவரி 23 ஆம் தேதி தான் தெரிந் துள்ளது.
உள்ளூர் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையாகி யுள்ளது. பி.ஆர்.ஓ. வேலைக்கு நேர்காணல் வந்த தனக்கு, நேர்காணல் முடிந்த
பிறகு மாலை ஆளுநர் மாளிகை வருமாறு ஆளுநரிடம் இருந்து மேஸேஜ் வந்ததாகவும், இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக அந்த பெண் ஷில்லாங் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித் துள்ளார்.
பின்னர் அங்கு சென்ற போது, ஆளுநர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக அந்த பெண் கூறியுள்ளார். (The complainant had told The Highland Post that the governor allegedly “hugged and kissed her”)
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சண்முகநாதன், தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்றும் பலர் நேர்காணலுக்கு வரும் போது
ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும், வேலை கிடைக்காதவர்கள் இப்படி புகார் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து பெண்கள் உரிமை அமைப்பினர் ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தினர். அத்தோடு ஆளுநர் மாளிகை அலுவலர்கள் 98 பேர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பினர்.
அதில் எந்த நேரமும் இளம் பெண்கள் ஆளுநரின் படுக்கை அறைக்கு செல்லும் அளவிற்கு அவர்களுக்கு ஆளுநர் அதிகாரம் அளித்துள்ளதாகவும், இது ஆளுநர் மாளிகை பாதுகாப்பு விசயத்தில் செய்யப்பட்ட சமரசம் என்றும் கூறியுள்ளனர்.