திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்தியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படை வீரர் ஒருவர் திடீர் என மைக் பிடித்து, வீர வசனம் பேசினார்.
வாலிப வயதில் நானும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக இருந்தேன், துள்ளி குதித்து வந்த காளைகளை அடக்கி யுள்ளேன். நீங்கள் ஜல்லிக் கட்டிற்காக போராட்டம் நடத்துவது எனக்கு பெருமையாக இருக்கிறது.
அதே வேளையில் உங்கள் பாதுகாப்பு ரெம்ப முக்கியம் அது உங்கள் பெற்றோ ர்களுக்கு தான் தெரியும். டூவீரில் கவனமாக செல்ல வேண்டும். நீங்கள் ஒரு அப்துல்கலாம், சுபாஷ் சந்திரபோஸ் போல வர வேண்டும்.
ஒவ்வொரு மாணவனும் மரகன்றுகள் நட்டு, மரம் வளர்க்க முன்வர வேண்டும். அமைதி வழியில் போராடுங்கள், என்னுடைய வாழ்த்து க்கள் என ஆவேசமாக பேசினார்.
அவர் பேசி முடித்த உடன் அவரை போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த மாணவர்கள் சிலர் முத்தமழை பெய்து, தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.