சீனாவிலுள்ள கடையொன்றில் அரிசி திருடியதாக கூறப்படும் எலியொன்றுக்குத் தண்டனையாக, லொறியொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்க விட்டதுடன்,
இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதாகையொன்றையும் எலி மீது சிலர் மாட்டியுள்ளனர்.
சீனாவின் தென் பிராந்திய நகரான ஹேயுவான் நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம் பெற்றது.
மேற்படி எலி, கடையில் அரசி திருடுவதை சிலர் கண்டுபிடித்தவுடன், அதற்கு இவ்வாறு தண்டனை அளிப்பதற்கு தீர்மானித்தனராம்.
தவறை ஒப்புக்கொள்ளும் விதமான வாசகங்கள் மஞ்சள் நிற அட்டையொன்றில், எழுதப்பட்டு, எலியின் மீது தொங்கவிடப்பட்டது.
உங்களின் அரிசியை திருடமாட்டேன்'. இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்” எனவும் அதில் எழுதப் பட்டிருந்தது.