பெங்களூரு பல்கலை கழகம் அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் ஏற்க மறுத் துள்ளார்.
மேலும் தான் படித்து டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித் துள்ளார். பெங்களூரு பல்கலை கழகத்தின் 52-வது பட்டமளிப்பு விழா இன்று ( வெள்ளிக் கிழமை) பெங்களூரு வில் நடைபெற இருக் கிறது.
இதை யொட்டி பல்கலை கழகத்தின் துணை வேந்தர் திம்மே கவுடா நேற்று முன் தினம், விளையாட்டுத் துறையில் சாதித்த
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழக்கப் படுகிறது.
இதனை கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா வழங்குகிறார்’ என அறிவித் தார்.
இந்நிலையில் ராகுல் திராவிட் நேற்று பெங்களூரு பல்கலை கழகத்தின் துணை வேந்தர் திம்மே கவுடாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.
அதில், எனது பணியை பாராட்டும் வகையில் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட, ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெறு வதையே விரும்புகிறேன்.
கல்வியில் விளையாட்டு துறை தொடர்பாக ஆய்வு செய்து, முறையாக டாக்டர் பட்டத்தை பெறுவதையே கவுரவமாக கருதுகிறேன் என குறிப்பிட் டுள்ளார்.
இதே போல கடந்த 2014-ம் ஆண்டு குல்பர்கா பல்கலை கழகம் அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தையும் திராவிட் வாங்க மறுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த ராகுல் திராவிட்டு க்கு முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
நீங்களும் பாராட்டுங்களேன்..