மணமகனின் செயலால் அதிர்ந்த பெண் !

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜன். இவர் திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
மணமகனின் செயலால் அதிர்ந்த பெண் !
இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெற்றோர் களால் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் செய்து வந்தனர்.

இந்நிலையில் குடிப்பழக்கம் கொண்டு மாப்பிள்ளை நேற்று இரவு நண்பர்க ளுடன் மது அருந்து விட்டு திருமண மண்ட பத்திற்கு வந்தி ருக்கிறார். 

விடிஞ்சா கல்யாணம் என்பதையே மறந்த மாப்பிள்ளை போதையில் கலாட்டா செய்ய ஆரம்பித்தி ருக்கிறார். மேலும் திருமண மண்டபத்தில் இருந்த சமையல் அறைக்கு சென்று, சமையல் காரர்களிடம் தகராறு செய்துள்ளார். 

ஆத்திரமடைந்த அவர்கள், சமைக்க முடியாது என, வெளியேறினர். இதை யடுத்து, மணப்பெண் – மாப்பிள்ளை வீட்டார் இடையே, தகராறு ஏற்பட் டுள்ளது. 

இதனால் ஆவேச மடைந்த மணப்பெண், ‘குடிகார மாப்பிள் ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என கூறி நள்ளிரவே, தன் ஊருக்கு கிளம்பி சென்றார்.
நேற்று காலை, மாப்பிள்ளை தரப்பினர், மணப்பெண் திருமணத்தை பாதியில் நிறுத்தி சென்று விட்டதாக, சிதம்பரம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் இருதரப்பி னரையும் அழைத்து விசாரணை நடத்தினார். மணப்பெண், ‘குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது’ என, மணமகள் தெரிவித் ததால் மாப்பிள்ளை வீட்டாரும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:
Privacy and cookie settings