கூடுதல் பக்கோடா கேட்டதால் வாலிபர் கொலை !

1 minute read
சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (27). 
கூடுதல் பக்கோடா கேட்டதால்  வாலிபர் கொலை !
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு கடந்த மாதம் 30-ம் தேதி சிக்கன் பக்கோடா சாப்பிடச் சென்றார். 

சாப்பிட்ட பின்னர் தனக்கு கொசுறு கொஞ்சம் வேண்டுமென உணவக ஊழியரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 
இதனால் ஊழியருக் கும், சந்திரமோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஹோட்டல் ஊழியரை அடிப்பதை கண்டு, மற்ற ஊழியர்களும் சந்திரமோகனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் சந்திரமோகன் பலத்த காயங்களுடன் தனது வீட்டாரை அழைத்துச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் உணவக ஊழியர்கள் மீண்டும் சந்திரமோகனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சந்திர மோகனை அவரது உறவினர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கர்னூல் போலீஸார், உணவக உரிமையாளர் அபுபக்கர் உட்பட ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings