தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்காக ஒட்டு மொத்த தமிழகமே போராடி கொண்டிருக்கும் வேளையில் புதியதாக ஏதாவது சொல்லி மக்களின் கோபத்திற்கு ஆளாவது பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சாமியின் தொடர் கதையாகி விட்டது.
போராட்டம் நடத்தும் மாணவர்களை பொறுக்கி, தேச துரோகி என்று அவரோட ட்விட்டர் பக்கத்தில் தினந்தோறும் பதிவிட்டு கொண்டி ருக்கிறார்.
அதே போல் நடிகர் கமலையும் கடந்த 2 நாட்களாக விமர்சனம் செய்து வருகிறார். நீங்கள் ஒரு முட்டாள், தமிழ் பொறுக்கி என்று நேரடியாக விமர்சனம் செய்கிறார்.
அது மட்டும் இல்லாமல் சென்னை மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க சிவபெருமான் தான் போலீசை அனுப்பி நடவடிக்கை எடுத்தார் என்று சொல்லி வருகிறார்.
இவரது கருத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் இவர் நிறுத்துவதாக இல்லை டெல்லியில் அமர்ந்து கொண்டு தினந்தோறும் ஒரு கருத்தை தெரிவித்து வருவது வாடிக்கையாகி விட்டது.