ஐ.டி. அதிரடி இனி ஆரம்பம் | IT Action is no longer just the beginning !

நாடு முழுவதும் உள்ள கள்ள நோட்டுகளும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.

மேலும், பழைய நோட்டுக்களை வங்கிகளிலோ அஞ்சலகங்களிலோ டெபாசிட் செய்யலாம் எனவும், புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டது.

இதனை யடுத்து, பழைய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் டெபாசிட் செய்யப் பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஏழைகளின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பல கோடிகளை குவித்தனர் கறுப்புப்பண முதலைகள்.

இதனால் கொதித்துப் போன மத்திய அரசு தனது அதிரடியை ஆரம்பிக்கத் தொடங்கியது. வங்கிக் கணக்குகளில் 2,50,000க்கு மேல் டெபாசிட் செய்துள்ள பட்டியலை தற்போது தயாரித்து அவர்களுக்கு நோட்டீசும் அனுப்ப உத்தர விடத் தொடங்கியது.

இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் நிருபர்களிடம் தெரிவிக்கையில், பழைய நோட்டுகள் டெபாசிட் மீதான நடவடிக்கை இன்னும் முழுவீச்சில் தொடங்க வில்லை.

இன்னும் வங்கி டெபாசிட்டுகள் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான விவரங்களை பெறவேண்டியுள்ளது. நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

மேலும், நவம்பர் 8ம் தேதி அறிவிப்பு தொடர்பான நடவடிக்கை இனிமேதான் தொடங்கப் படும். இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும், அளவுக்கு அதிகமாக கணக்கில் வராத பணத்தை குவித்திருப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings