சென்னை மெரினாவில் ஜல்லிக் கட்டுக்கான போராட்டம் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த அறப் போராட்டம் தீவிரமடை ந்ததால் ஜல்லிக் கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது.
ஆனால் போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்ட த்தில் ஈடுபட்டிருந்த போராட்டக் காரர்களை காவல் துறையினர் வலுக் கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
காவல் துறையின் இந்த அடாவடி செயலால் போராளிகள் அதிர்ச்சி யடைந்து உள்ளனர்.
மேலும் சென்னை மெரினாவில் நடந்து வரும் சம்பவம் மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு கூர்வதாக இருக்கிறது.
அஹிம்சை வழியில் போராடி வரும் இளைஞர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
இந்திய விடுதலை போராட்ட காலத்தில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுபோல ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி மிகுந்த இந்த அறிவழி போராட்டமும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.