ஜல்லிகட்டுக்காக பதக்கத்தை ஒப்படைக்க முன் வந்த விமானப்படை வீரர் | Jallikat medal for the airmen who came before handover !

0 minute read
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்து வருகிறது.


இந்த போராட்டத்தில் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் அடுத்த மூலப்பாதையை சேர்ந்தவர் செல்வராமலிங்கம் என்பவர் கலந்து கொண்டார். இவர் முன்னாள் விமானப்படை வீரர்.

இவர் ஜல்லிக் கட்டுக்காக கார்கில் போரின்போது அளிக்கப்பட்ட பதக்கத்தை திரும்ப ஒப்படைப் பதாக கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,
ரூநான் கடந்த 1995 முதல் 2005 வரை விமானப் படையில் பணியாற்றினேன்.

அந்த காலக் கட்டத்தில் கார்கில் போரிலும் ஈடுபட்டேன். இதற்காக எனக்கு ஆபரேஷன் விஜய் என்னும் பதக்கம் வழங்கப் பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறாதது வேதனை அளிக்கிறது. னுஎனவே எனக்கு அளித்த பதக்கத்தை திரும்ப ஒப்படைக்க வந்தேன் என்றார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings