திருப்பூரில் சாலையில் நின்ற காளையை, டிராபிக் காவலர் ஒருவர் விரட்ட முயன்றுள்ளார். அப்போது, காளை விரட்டி தாக்கியதில் காவலர் காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கல் அன்று பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
பல இடங்களில் காளைகளை அவிழ்த்து விட்டதால் சாலை மற்றும் தெருக்களில் நிற்கின்றன.
இந்த நிலையில், திருப்பூரில் சாலையில் நின்ற காளையை, டிராபிக் காவலர் ஒருவர் விரட்டியுள்ளார். அப்போது, காளை, காவலரை விட்டியது. இதில் காவலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
காவலர் ஒருவரை, காளை ஒன்று விரட்டி சென்று தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.