ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட உரிய சட்டத்தை புதுவை அரசு நிறைவேற்றிட அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை புதுவை சட்டசபையில் முதல் அமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்தார்.
புதுவை சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் முதலாவதாக ஜெயலலிதா, சுர்ஜித்சிங் பர்னாலா,
வி.எம்.சி. சிவக்குமார், ஏ.வி.ஸ்ரீதரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து வறட்சிக்காக மத்திய அரசிடம் நிதி கோருவது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கமலக் கண்ணன் அரசு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதன்பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்தார்.
ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்க கோருவதற்கான அரசு தீர்மானத் தையும் அவர் முன் மொழிந்தார்.
இந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப் பதாவது :–
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். இதனை சங்க காலத்தில் ஏறுதழுவுதல் என்பர்.
முறையாக உணவ ளிக்கப்பட்டு காளைகள் பராமரிக்கப் படுகின்றன. எந்த வகையிலும் காளைகள் துன்புறுத்தப் படுவதில்லை.
இது போன்ற தோற்ற முடைய விளையாட்டு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ போன்ற நாடுகளில் தேசிய பொழுதுபோக்கு விளை யாட்டாக நடக்கிறது.
தமிழகத்தில் காளைகள் வதைக்கப்படுவ தில்லை. காளையின் மீது ஏறி வீரன் அடக்க மட்டுமே செய்கிறான்.
எனவே விலங்கினை துன்புறுத்தும் நிலையே இல்லாத இந்த வீரவிளை யாட்டை தடை செய்வது சரியான நிலைப்பாடு இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து,
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரதமருக்கு புதுவை அரசு சார்பாக கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இது குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்தவும் உள்ளோம்.
இதற்கிடையில் தமிழக அரசு மத்திய அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக சட்ட மன்றத்தில் சட்டரீதியான உரிமையை வழங்கி சட்ட மசோதாவை நிறைவேற்றி உறுதி செய்துள்ளது.
ஆகவே தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்தவிதமான இடையூறும் இல்லை. புதுவை மாநிலத்தில் மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் ரோடியர் மில் மைதானத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
நமது மாநில அரசும் சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. எனவே தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான இதனை தொடர்ந்து நடத்திட
உரிய சட்டத்தை நமது புதுச்சேரி அரசு நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் மத்திய அரசை இச்சட்ட பேரவை வலியுறு த்துகிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளது. இந்த தீர்மான த்தின் மீது இன்று (புதன் கிழமை) எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.