ஒன்றுக்கும் ஆகாத ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டமா? வாட்டாள் நாகராஜ் !

தமிழகம் முழுவதும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு கோரி போராட்டம் தீவிரம் அடைந் துள்ளது. 6வது நாளாக போராட்டம் இன்றும் தொடர்கிறது.
ஒன்றுக்கும் ஆகாத ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டமா? வாட்டாள் நாகராஜ் !
ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான தமிழர்களின் போராட்ட த்துக்கு உலகமே ஆதரவு தெரிவித்து உள்ளது. 

அது போல நமது அண்டை மாநிலமான கர்நாடக மக்கள் கூட ஆதரவு தெரிவித் துள்ளனர். ஆனால் வாட்டாள் நாகராஜ் மட்டும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர நடவடி க்கைகள் எடுத்து வருகிறது. இது குறித்து கன்னட தனியார் தொலைக்காட்சி ஒன்று வாட்டாள் நாகராஜிடம் கருத்து கேட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, தமிழர்களின் போராட்ட த்துக்கு பணிந்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

வேலைக்கு ஆகாத ஜல்லிக் கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு காவிரி போன்ற விஷயங்களில் ஏன் மவுனம் காக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா எவ்வளவோ முறை பார்க்க முயன்றும் அதனை மோடி அதனை பொருட் படுத்தவில்லை.

ஆனால் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்ற உடனே அருகில் உட்கார வைத்து பேசுகிறார். மோடி என்ன இந்திய பிரதமரா அல்லது தமிழக பிரதமரா என காட்டமாக பதில் அளித்தார்.
Tags:
Privacy and cookie settings