காளையைக் கொடுமைப் படுத்தும், காளையை வதைக்கும் விளையாட்டு அல்ல ஜல்லிக்கட்டு. ஒரு மனிதர் காளையின் திமிலைப் பிடித்துக் கொண்டு 20-30 அடி தூரத்துக்கு, அதிக பட்சமாக 10-20 விநாடிகள் ஓடுவது தான் ஜல்லிக்கட்டு.
அதனால் தான் ஏறு தழுவுதல் எனப்பட்டது. வாய்ப்பிருந்தால், பரிசுத்தொகை கட்டப்பட்ட துண்டைக் கொம்பால் குத்தப்படாமல் அவிழ்ப்பதில் தான் ஜல்லிக்கட்டின் லாகவம் அடங்கியி ருக்கிறது.
சினிமா நாயகர்கள் போலியாகச் சித்தரிப்பதைப் போல, எந்த ஊரிலும் மாட்டைத் தனியாகப் பிடிக்க யாரும் முயற்சிப்ப தில்லை; கொம்பைப் பிடித்து அடக்க முயற்சிப்பதும் இல்லை.
காளைகளைப் போற்றும் திருவிழா ஜல்லிக்கட்டு. ஒரு காளை ரத்தம் சிந்தினால் கூட ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் என்பது விதி.
பொலி காளைகள் தான் ஜல்லிக்கட்டில் விடப்படுகின்றன. வெற்றி பெறும் காளைகள் உள்ளூர் பசுக்களுடன் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த இரண்டு அம்சங்களுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப் படுகின்றன. கிராமங்களில் கோயில் காளைகள் இலவசமாக இனச்சேர்க்கை க்குப் பயன்படுத்தப் படுகின்றன.
ஜல்லிக்கட்டில் இயல்பாக வெற்றி பெறுபவை மரபணுரீதியில் வீரியமிக்க காளைகளே. இதன் மூலம் உள்ளூர் மாட்டின ங்களின் மரபணு வளம் பராமரிக்கப் படுகிறது.
வீரியமிக்க காளைகளின் குட்டிகளையே விவசாயிகள் அதிகம் விரும்பு கிறார்கள்.
அந்த வகையில் ஒரு பகுதியிலுள்ள காளைகளை, ஊருக்குக் காட்சிப் படுத் துவதற்கான சிறந்த வாய்ப்பு ஜல்லிக்கட்டு. அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டுச் சந்தைகள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு உள்ளூர் மாட்டினத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, அது உருவான நிலப்பகுதியில், அதன் இயல்புடன் இனப் பெருக்கம் செய்வது தான் (In-situ conservation) என்கிறது ஐ.நா. சபையின் உயிர் பன்மய சாசனம்.
இந்த சாசனத்தில் இந்தியா கையெழுத் திட்டுள்ளது. அதன்படி உணவு, விவசாய மேம்பாட்டுக்காக உள்ளூர் கால்நடைகளைப் பெருக்குபவர்கள், அவற்றைப் பயன்படுத்து பவர்கள்
ஓர் உயிரினத்தின் மரபணு வளத்தைப் பாதுகாக் கிறார்கள் என்பதை அங்கீகரித்து, அவர்களுடைய பாரம்பரிய அறிவு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர வேண்டும். உள்ளூர் மாட்டினங்கள் நம் மரபார்ந்த சொத்து.