ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை !

மாணவர்கள் கல்லூரிகளில் படிக்கும் போது கிடைக்காத ஒரு அற்புதமான பயிற்சி பட்ட றையாக இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந் துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை !
இந்த பயிற்சியின் சிறப்பே ஒருங்கிணைப் பில்லாமல் நேர்த்தியாக நடக்கும் விசித்திரம். 

எங்கோ இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு அலைவரிசை அவர்களை ஒரு நேர்த்தியான கோட்டில் பயணிக்கச் செய்துள்ளது. இது அந்த இளைஞர் களுக்கு கிடைத்த மிகப்பெரிய நேரடி பயிற்சி. 

இதன் மூலம் அவர்களின் திட்டமிடுதல், தலைமைப் பண்பு, ஒருங்கிணைப்பு போன்ற பண்புகளை களத்தில் நேரடியாக அவர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத் துள்ளது.

யாரும் பயிற்சி அளிக்காமலேயே. அதை விட ஒரு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்தது. 

மாணவிகளை பாதுகாக்கும் பண்பு, சுயமாக தூய்மை செய்து கொள்ள எடுத்த முடிவு, பொது விடத்தில் போக்குவரத்து பாதிக்கப் பட்டு விடக்கூடாது. 
என்பதற்காக போக்கு வரத்து போலீசாருடன் களம் இறங்கி உதவி செய்து வருவது, அடிதடி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமை, குறிப்பாக மது பயன்படுத்தாமை, 

சமூக சிந்தனை பெற்றுள்ளமை என்று தனிப்பட்ட சிறப்பு பண்புகள் இளைஞர் களை எண்ணி வியக்க வைக்கிறது. அதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட்.

இதிலிருந்து அவர்கள் பல்வேறு வகையில் பக்குவப் பட்டிருப்பதுடன் ஒரு தலைசிறந்த பயிற்சியை பெற்றுள்ளனர். 

அல்ல அல்ல இந்த போராட்டம் பயிற்சிக்கு வகை செய்து விட்டது. அரசியல் களத்தில் கூட இதைப் போன்ற ஒரு பயிற்சியை அவர்களால் பெற்றிருக்க முடியாது. 
இனிமேல் தமிழகத்தின் தலையெ ழுத்தை மாற்றும் திறவுகோள் உங்களிடம் தான் இளைஞர்களே. 

புறப்படுங்கள் அடுத்தக் கட்ட பயணத்தை நோக்கி.. எமக்கான பணிகள் காத்திருக் கின்றன,சமூகச் சாலைகளில்…
Tags:
Privacy and cookie settings