பத்திரிகையாளர்கள் தாக்குதல்; கண்டன ஆர்ப்பாட்டம் | Journalists attacked; Protest !

1 minute read
பத்திரிகை யாளர்களை தாக்கிய தமிழக போலீசாரை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகை யாளர்களின் சங்கம் ( TUJ ) சார்பில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது.


ஜல்லிக்கட்டுப் போராட்ட த்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது மட்டுமின்றி, பாலிமர் தொலைக் காட்சி, பிபிசி தமிழ் தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, உட்பட ஏராளமான பத்திரிகை யாளர்களைத் தாக்கியும்,

கேமராக்களை உடைத்தும், அராஜகம் செய்துள்ள காவல் துறையினரை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவு ள்ளதாக தமிழ்நாடு பத்திரிகை யாளர்கள் சங்கம் அறிவித் துள்ளது.

மேலும், இந்த கண்டனப் போராட்ட த்தில், பத்திரிகை யாளர்கள் மட்டுமன்றி அனைத்து போராளிகளும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய உள்ளனர்.

அறவழியில் போராடிய இளைஞர் களையும், களத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றிய பத்திரிகை யாளர்களையும் தாக்கப் பட்டதற்கு நியாயம் கேட்போம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Tags:
Today | 22, March 2025
Privacy and cookie settings