பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கிய நடிகை த்ரிஷாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இதன் காரணமாக சிவகங்கை பகுதியில் நேற்று நடைபெற்ற திரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பும் ரத்து செய்யப் பட்டது.
இதை யடுத்து நான் ஜல்லிக்கட்டு எதிரானவள் அல்ல, பெண்களை அபாச வார்த்தைகளால் பேசும் நீங்கள் எல்லாம் தமிழர்களா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா ஆதங்கமாக தெரிவித்தார்.
இதற்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் “கன்னியும் வாழ, காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை த்ரிஷாவை காயப்படுத் துவதை நிறுத்தங்கள். அவர்க்கும் நமக்கும் உள்ள வேற்றுமை ஊரறியட்டும், தர்க்கம் தொடர்க நேசத்துடன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.