தமிழர்களின் வழியிலே கன்னடர்கள் | Kannadigas way of Tamils !

மத்திய அரசினை மட்டுமல்ல உலக நாடுகளை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஜல்லிக்கட்டு போராட்டம். தற்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்து வர காரணம்


தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்டிருந்த தடை. இந்த தடையை விளக்கக்கோரி இளைஞர்கள், மாணவர்கள், மற்றும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.
 
தமிழர்களின் போராட்ட த்தின் வெளிப்பாடாக கர்நாடாக மாநிலத்திலும் தடை செய்யப் பட்டுள்ள பாரம்பரிய எருமை பந்தயத்துக்கு அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட் டங்களில் நடைபெற்று வந்த கம்பளா என்ற பெயரில் சேற்றில் எருமை மாடுகளை ஓடவிட்டு பந்தயம் நடத்துவார்கள்.

ஆனால் கம்பளா பந்தயம் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப் பட்டுள்ளது. அதன் தடையை நீக்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கம்பளா போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தனர்.

ஆனால் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றம் உத்தரவை காரணம் காட்டி அந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரியது. இதையடுத்து, அந்த மனுவை தலைமைநீதிபதி எஸ்.கே. முகர்ஜி ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து கம்பளா சமூகத் தினரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கம்பளா குழுவின் தலைவர் அசோக் ராய் கூறுகையில், வரும் வியாழக்கிழமை முதல் நாங்கள் மங்களூர் மண்டலத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

உடுப்பி மற்றும் மங்களூர் பகுதியில் இருந்து 200 ஜோடி காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ளும். என்ற தகவலினை தெரிவித்தார். மேலும் இங்கு மாடுகளை கொடுமைப் படுத்துவதில்லை.

இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பீட்டா அமைப்பினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் எங்கள் போராட்டத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings