சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் முதலில் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைக்க ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கற்களை வீச ஆரம்பித்தனர்.
பின்னர், ஐஸ் அவுஸ் பகுதியில் வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு போராட்டக் காரர்கள் தீவைத்து எரித்ததால் அங்க தடியடி நடந்து வருகிறது.
அப்போது ஒருவர் அங்கு மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தார். அவர்களை பெண்கள் சூழ்ந்து, உயிரோடு இருக்காறாரா தெரியலையே எனத் பெண்கள் அலறியடித்து உதவி கேட்டனர்.
அப்போது அங்கு விரைந்தவர்களையும் மனிதாபிமானம் இல்லாமல் போலீசார் அடித்து விரட்டினர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மயக்க மடைந்தவரை நோக்கி செய்தியாளர்கள் விரைந்த போது போலீசாரால் தடுத்து நிறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.