ஜல்லிகட்டால் கூகுள் மேப்பில் முத்திரை பதித்த மெரினா !

சென்னை மெரினாவில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிகட்டால் கூகுள் மேப்பில் முத்திரை பதித்த மெரினா !
தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக் காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் கிரவுட்சோர்சிங் என்று கூறப்படும் தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது மக்களிட மிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறையை அறிமுகப் படுத்தியது.

இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் லொக்கேஷன் வசதி ஆன் செய்திருக்க வேண்டும். 

இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும்.

அது மட்டுமின்றி ஒரே இடத்தி லிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, 
என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்ன வென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, 

எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிச லில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக் கிடுவது தான்.

இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன் பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.

சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக் கையும் தற்போது பார்க்கலாம். 
ஆனால், போராட்டக் காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள் வரைப்பட மேப்.
Tags:
Privacy and cookie settings