முக்கிய நிகழ்வுகளை புறக்கணிக்கும் மீடியாக்கள் !

ஜல்லிக்கட்டு போராட்டம் போலீசாரின் வன்முறையால் கலவரமாக வெடித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய நிகழ்வுகளை புறக்கணிக்கும் மீடியாக்கள் !
இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்ட த்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதலை தொடுத் துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் மெரினா அருகிலுள்ள விவேகானந்தர் ஹவுசில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

அந்த இளைஞர் களுக்கு உதவுவதற் காக அங்கே 30 பேருக்கும் மேல் போராட்டக் காரர்கள் வந்திருக் கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பெண்களை கையை பிடித்து இழுத்து வேனில் ஏற்றியிரு க்கின்றனர்.

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ஊடகங்களை பார்த்து கதறியிருக் கிறார்கள். ஆனால் அவர்களோ கண்டு கொள்ளாத வாறு விலகி சென்றிறுக் கிறார்கள்.
மேலும் நேற்று தேசியக் கொடியை தேசப்படுத்திய பேலீசார் பற்றியும் எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை.

இதற்கிடையே ஆங்காங்கே நடக்கும் முக்கிய நிகழ்வுகளை புறந்தள்ளி விட்டு கூட்டம் அதிகமாக இடங்கள், கலவரம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றை மட்டும் காட்சிப் படுத்துகின்றனர்.

மேலும் ஊடகங்கள் அவர்கள் டிஆர்பி ரேட்டிங்கை மட்டுமே கவனத்தில் கொண்டு மட்டுமே செயல்பட்டு வருவதாக போராளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings