மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்பு !

அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறு களினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. மனநலப் பிரச்னை யின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வது தான், 
மனநலக் கோளாறு


அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி. வீட்டில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்பட்டால் நன்கு படித்த, விவரமறிந்தோர் கூட பல தருணங்களில் ‘சைக்கலாஜிஸ்டிடம் போவதா, சைக்கி யாட்டிரிஸ்டிடம் போவதா’ என குழப்ப மடைகின்றனர். 

சைக்கலாஜிஸ்ட் (Psychologist), சைக்கியாட்டிரிஸ்ட் (Psychiatrist) இந்த இருவருக்கும் வித்தியாசம் என்ன?

இரண்டுமே வெவ்வேறு துறைகள்... மனநோய் மருத்துவர் (Psychiatrist) என்பவர் உளவியல் துறையில் ‘மருத்துவ டாக்டர்’ (M.D. Psychiatry) பட்டம் பெற்றவராக இருப்பார். 

இவர், மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரியாகக் கணித்து, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் மின் அதிர்வு மூலம் சிகிச்சை அளிப்பார்.

மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம் (உளவியலாளர் / Psychologist) அல்லது மனநல ஆலோசனை படிப்பில்

முதுகலைப் பட்டம் பெற்றவராக இருப்பார் (Psychology / Psychiatric social work / Guidance counseling). இவர் மருந்துகள் இன்றி கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பார்.

உளவியல் ஆலோசனை வழங்குவ தற்கான உரிமமோ, சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி பெற்றவரிடமோ மட்டுமே ஆலோசனைக்கு செல்ல வேண்டும். 

மனது சார்ந்த விஷயமான தால், இதற்கென தகுதி பெற்றவர்கள் மட்டுமே மனநல ஆலோசனை (counseling) மற்றும் சிகிச்சை (psychotherapy) வழங்க அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

மனநல ஆலோசகர், ஒருவரிடம் அறிவியல் அணுகு முறையில் பேசி, பிரச்னைகளை அவர்களின் கண்ணோட்டத் திலிருந்து பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொள்வார்.

பின்னர் அதனை, உளவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கான சரியான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிப்பார். அவர்களின் பிரச்னைக் கான தீர்வை அட்வைஸாக கொடுக்காமல், பாதிக்கப் பட்டவரே தேர்ந்தெடுக்க வழிவகுப்பார். 

ஒருவரின் சிந்தனை (thinking), உணர்வுகள் (feeling) மற்றும் செயல் பாடுகளில் (behavior) சரியான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வழி வகுப்பார். வாழ்வியல் திறன்கள், 
சைக்கலாஜிஸ்ட் - Psychologist


ஆரோக்கிய வாழ்க்கை பாணி (Healthy Life Style) குறித்த பயிற்சி மற்றும் மனதின் செயல் பாடுகளைக் குறித்த புரிதல் ஏற்படுத்தும் உள கல்வி (psychoeducation) போன்ற உத்திகளும் இதற்காக பயன் படுத்தப் படுகின்றன.

பொதுவாக உளவியல் காரணங்க ளால் ஏற்படும் மனநலப் பிரச்னைக ளான மனப்பதற்ற உள நோய் (Anxiety Disorders),  அளவுக்கு மீறிய அச்சம் (Phobia), மனச்சோர்வு (Depression) மற்றும் மன அழுத்தம் (Stress), கணவன், மனைவி உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள், டீன் ஏஜ் மனக்குழப்பங்கள், விவாகரத்து,

நெருக்க மானவரின் மரணம்/ பிரிவு, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பல பிரச்னை களுக்கு மனநல ஆலோசகர் (psychologist/ professionally trained counselors) அளிக்கும் ஆலோசனை மற்றும் சைக்கோ தெரபியே போது மானதாகும். 

உயிரியல் மற்றும் மரபணு காரணங்க ளால் ஏற்படும் மனநோய் களுக்கு (உதாரணம்: மனச்சிதைவு நோய்), மனநோய் மருத்துவர் அளிக்கும் மருந்துகளும் தேவை.




பள்ளிக்கூடம் போகாத பாலா!

5ம் வகுப்பு படிக்கும் பாலா ஒரு மாதமாகவே பள்ளி செல்ல மறுப்பதாகக் கூறினர். கட்டாயப் படுத்தி அழைத்து சென்றால் மிகவும் முரண்டு பிடிப்பதா கவும் பள்ளியின் கேட்டைப் பிடித்து பயந்து சத்தம் போட்டு அழுவதாகவும் கூறினார்கள். 

ரொம்பவும் வற்புறுத்தி னால், அங்கேயே வாந்தி எடுத்து, வலியில் துடிப்பதால் அவனை மேலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள்.

பாலா பல்வேறு மருத்துவர் களிடம் அழைத்து செல்லப்பட்டு, பல்வேறு மருத்துவ சோதனை செய்து கொண்டதன் ஆவணங்களும் பெற்றோரிடம் இருந்தன. 

ஒரு மருத்துவ பரிசோதனை யில் கூட வாந்தி, தலைவலி, வயிற்றுவலி என அவனது உடல் உபாதைகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காதது அடுத்த அதிர்ச்சி.
சைக்கியாட்டிரிஸ்ட் - Psychiatrist


‘என் மகனுக்கு பைத்தியமா மேடம்?’ என பலவீனமாக கேட்டார் பாலாவின் அம்மா. அவனது அப்பாவோ, ‘நம் பரம்பரையில் யாருக்கும் அப்படி இல்லை. 

அவன் ஸ்கூலுக்குப் போக சோம்பேறித்தனம் பட்டுட்டு பொய் சொல்றான்... நாலு வைச்சா சரியாயிரும்... எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்’ என மனைவியைக் கடிந்து கொண்டார்.

பாலாவிடம் தனியாக பேசினேன். சகஜ நிலைக்கு கொண்டு வரவே சில நாட்கள் ஆனது. பின்னர், விளையாட்டு முறையில் (Play Therapy) அணுகி சில உளவியல் சோதனை களுக்கு பின்னர், 

பிரச்னையின் காரணத்தை புரிந்து கொண்டேன். சமீபத்தில் அவன் பெற்றோர் சண்டை போடுவதை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்திருக் கிறான்.

பள்ளியில், பாலாவின் நெருங்கிய நண்பன் தன் பெற்றோர் பிரிந்து வாழ்வ தாகவும் அவன் அத்தை வீட்டில் இருப்ப தாகவும் கூறியதைக் கேட்டது முதல், பாலாவுக்கு தன் பெற்றோரும் தன்னை விட்டு பிரிந்து விடுவார்களோ என பயம்.

பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போவதற்குள், ‘அம்மாவுக்கு ஏதாவது ஆகி விடுமோ’, ‘அப்பாவையும் அம்மாவையும் இனி பார்க்க முடியாமல் போய் விடுமோ’ என பதற்றம் கொண்டுள்ளான். 

இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், ஆசிரியரிடம் திட்டு வாங்கி யிருக்கிறான். எல்லாம் சேர்ந்தே அவன் பள்ளி செல்ல மறுத்துள்ளான். இதுபோன்ற மனநோய்க்கு பெயர் ‘பிரிவு குறித்த மனப்பதற்றம்’ (Seperation Anxiety Disorder).

பாலாவின் பெற்றோரிடம் அவனுடைய மனப்போராட்டம் பற்றி கூறி, ‘அவன் வேண்டுமென்றே நடிக்க வில்லை... 

இந்த மனநிலை யினால் தான் அவனுக்கு வலி மற்றும் பயம் ஏற்பட்டுள்ளது’ என விளக்கினேன். அவர்கள் அவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெளிவு படுத்தினேன்.

பதற்றத்தைச் சமாளிக்கும் வழிமுறையை யும் பாலாவுக்குக் கற்று கொடுத்தேன். அவனது ஆசிரியரிடம் இந்தப் பிரச்னையை புரிய வைக்க சொன்னேன். 

இதனால், அவனை வித்தியாச மாக பாவிக்காமல், மற்ற மாணவர் போலவே அணுகி, நல்ல வழிகாட்டியாக உதவ முடிந்தது.
பிள்ளைகளின் மனநிலை


இப்போது பாலா எவ்வித பயமோ, பதற்றமோ, உடல் நலிவு புகாரோ இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளி சென்று படித்து வருகிறான். கூட்டுக் குடும்பங்கள் உடைந்து போன இந்தக் கால கட்டத்தில் தான் பெற்றோரின் பொறுப்பு இரு மடங்காகிறது. 

பிள்ளைகளின் மனநிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால்,  பிரச்னை சிறியதாக இருக்கும் போதே, பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி தெளிவு படுத்தினால், எந்தப் பிரச்னையி லிருந்தும் மீட்கலாம்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகள் கவனிப்பாரின்றி பாதுகாப்புணர்வு இழந்து, பலவித பிரச்னை களுக்கு உள்ளாகின்றனர்.

இதற்காக, எல்லா நேரமும் பிள்ளை களுடனே செலவிட வேண்டும் என்பதில்லை. தரமான நேரம் எனப்படும் Quality Time செலவு செய்தால் போதும். 20 நிமிடமே என்றாலும் அதை மகிழ்ச்சியாக பிள்ளைகளிடம் செலவழித்தாலே போதும்.

பிள்ளை களுக்கு உணவும், இடமும், ஐபேட், டி.வி.யும் தந்தால் மட்டும் போதாது. அவன் சந்தோஷமாக உள்ளானா என கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. 

பெற்றோரிடம் எதையும் பகிர்ந்தது கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பிள்ளை களுக்கு விதைக்க வேண்டியதும் அவசியம்..... டாக்டர் சித்ரா அரவிந்த் மனநல நிபுணர் - நன்றி குங்குமம்
Tags:
Privacy and cookie settings