14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேகாலயா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜூலியஸ் கே டோர்பாங் மீது அம்மாநில சிறார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கு விசாராணையின் போது, ஜூலியஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அஸாம் மாநிலம் கவுகாத்தியில், ஜூலியஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஷில்லாங் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜூலியஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.