மக்கள் செல்வாக்கு அதிகரித்து வரும் பன்னீர் செல்வத்தை அவரே முன் வந்து ராஜினமா செய்ய வைத்து, தன்னை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது சசிகலாவின் கணக்கு.
மத்தியில் ஆளும் பா.ஜ.,அரசு முழு ஆதரவுடன் உள்ள பன்னீர் செல்வம், தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இது சசிகலா மற்றும் அவரது குடும்பத் தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி யுள்ளது.
அதன் காரணமாகவே, தம்பிதுரை மூலம் அறிக்கை விட சசி., திட்டம் தீட்டினார். தம்பிதுரையை எம்.எல்.ஏ.,தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற செய்து,
துணை முதல்வர் பதவி தருவாக ஆசை வார்த்தை கூறப் பட்டதாக அ.தி.மு.க., வட்டார தகவல் தெரிவிக்கிறது. அதனடிப் படையிலேயே தம்பி துரையின் ஒவ்வொரு மூவ்வும் இருப்பதாக தெரிகிறது.