மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் வாழும் கிராமத்தில் கட்டிய மனைவியை கணவரே நிர்வாண ஊர்வலம் போக செய்தது மட்டுமின்றி
அதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பரவவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் மேக்லகாளி கிராமத்தில் உள்ள ஒரு பெண், தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை.
இது குறித்து கணவர் விசாரித்த போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த இன்னொரு நபரை தனது மனைவி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது உறவினர் களுடன் சென்று மனைவி யையும், அவர் புதியதாக திருமணம் செய்த நபரையும் தனது ஊருக்கு அழைத்து வந்து நிர்வாண ஊர்வலம் போக வைத்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவர் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.