தகவல் தொடர்புக்கான Narrow Band என்றால் என்ன?

0 minute read
பிராட் பேண்ட் போலவே, Narrow Band என்பதுவும் தகவல் தொடர்புக்கான அலைக்கற்றை வரிசையைக் குறிக்கப் பயன்படுகிறது. 
தகவல் தொடர்புக்கான Narrow Band என்றால் என்ன?
அலைக்கற்றை வரிசை கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் அல்லது கிகா ஹெர்ட்ஸ் எனக் குறிப்பிடப் படுகிறது.

தொலைபேசி வழியாக டயல் செய்து, இணைய இணைப்பு பெற்று டேட்டா பரிமாறிக் கொள்ளப் படுவது Narrow Band ஆகும்.

இந்த அலைக்கற்றை வரிசையில், நொடிக்கு 50 கிலோ பைட்ஸ் அளவிலேயே தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன. இதற்கு மோடம் மற்றும் தொலைபேசி கேபிள்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பிராட்பேண்ட் அலைக்கற்றை வரிசையில் டேட்டா பரிமாற்றம் நொடிக்கு 50 கிலோ பைட்ஸுக்கும் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.

எனவே, Narrow Band என்பது, குறைவான அகலக் கற்றை அலை வரிசை வழியாக டேட்டா அனுப்பப்படு வதாகும்.
Tags:
Privacy and cookie settings