உடலில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உறுப்பு !

விஞ்ஞானிகளின் வேலையே கண்டுபிடிப்பது தான். உடல் மற்றும் உலகத்தையும் அவர்கள் எப்பொழுதும் ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

உடலில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உறுப்பு !
அப்பொழுது தான் அவர்களால் உலகுக்கு புதிதாக விஷயங்களையும், கண்டு பிடிப்பு களையும் அறிவிக்க முடியும். தற்பொழுது, மனித உடலில் புதிதாக ஒரு உறுப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மனித உடலில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உட்பட மொத்தம் 78 உறுப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 

தற்போது Mesentery என அழைக்கப்படும் சிறுகுடலின் அருகே அமைந்திருக்கும் ஒரு புதிய உறுப்பை மருத்துவர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

அயர்லாந்து நாட்டில் உள்ள முன்ஸ்டர் மாகாணத்தில் இருக்கும் லிமரிக் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் தான், இந்த புதிய உறுப்பை கண்டு பிடித்துள்ளதாக கூறப் படுகின்றது.

நடு ராத்திரியில பெட்ரூம் கதவை தட்டிய இன்ஸு... சீரழிந்த நடிகை நடந்தது என்ன?

அந்தக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் J Calvin Coffey கூறுகையில், இந்த Mesentery உறுப்பின் உடற்கூறியல் மற்றும் அமைப்பை பற்றி கண்டுபிடித்து விட்டோம்.
உடலில் இதன் பணி என்ன என்பதை பற்றி தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். 

இதை கண்டு பிடித்தால் பின்னர் இதன் அசாதாரண விடயங்கள் மற்றும் நோய் பரப்பும் தன்மை பற்றி கண்டுபிடித்து விட முடியும் என கூறியுள்ளார்.
உலக புகழ்பெற்ற, மனிதர்கள் உறுப்புகள் மற்றும் உடற்கூறியல் பற்றி எழுதப் பட்டிருக்கும் Gray’s Anatomy புத்தகத்தில் 

இந்த புதிய Mesentery உறுப்பு தற்போது சேர்க்கப் பட்டுள்ளதால் மொத்த உடலுறுப்பின் எண்ணிக்கை 78லிருந்து 79ஆக உயர்ந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings