ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனைக் கொன்று தின்ற 16 வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தீபு குமார் (9) என்ற சிறுவன் கடந்த திங்களன்று காணாமல் போனான்.
மறு நாள் செவ்வாய்க் கிழமையன்று அவனது தலையற்ற உடல் ஒரு வெட்ட வெளியில் வீசப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமரா ஒன்றில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும்
சிறுவனுடன் தீபு குமார் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் குறித்த சிறுவனை பொலிஸார் விசாரணை செய்த போது அதிர்ச்சித் தகவல்கள் சில வெளியாகின.
சந்தேக நபர் அளித்த வாக்கு மூலத்தில், திங்கட்கிழமை மதியம் சுமார் ஒன்றரை மணியளவில், பட்டம் விடும் நூலை தருவதாகக் கூறி தீபு குமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும்,
அங்கு தீபுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து குளியலறையில் வைத்து தலையை வெட்டி யெடுத்த பின் உடலைக் கூறு போட்ட தாகவும், தீபுவின் உடல் பாகங்களைக் கடித்துத் தின்றதாகவும், வழிந்த இரத்தத்தைக் குடித்ததாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும், தனது ஆசிரியர்கள் மேல் இருந்த வெறுப்பினால், தீபுவுன் இதயத்தை தான் கல்வி கற்று வரும் பாடசாலையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்து அந்தப் பாடசாலை வளவுக்குள் வீசியதாகவும் குறிப்பிட் டுள்ளான்.
சந்தேக நபருக்கு ஏற்கனவே இறைச்சியைப் பச்சையாக உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது.
கோழி இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவதையும், எதுவும் கிடைக்காத போது தனது கையையே கடித்துச் சாப்பிட முயன் றதையும் வாக்குமூலத்தில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.
இதையடுத்து குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் நரமாமிசத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள் ளதோடு, அவனை மனவள ஆலோ சகரிடம் பரிசோதனைக் காகவும் அனுப்பி வைத்துள்ளனர்.