ஜல்லிக்கட்டு இல்லை அலங்காநல்லூர் மக்கள் !

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் வாடிவாசல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு இல்லை அலங்காநல்லூர் மக்கள் !
இதன் பின்னர் வெளியூர்களில் இருந்து காளைகளை அலங்காநல்லூருக்கு வாகனங்களில் அழைத்து வந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காளைகளை வாடி வாசலில் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

எங்களுக்கு நிரந்தர தீர்வு காணும்வரை ஜல்லிக்கட்டு நடைபெறாது என்று திட்டம் வட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதனால் அலங்காநல்லூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கின்றனர். மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
Tags:
Privacy and cookie settings