ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இரவு, பகல் பாராமல் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆண் மகன்களுடன் சேர்ந்து இளம் பெண்களும் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதை நம்மால் காண முடிகிறது. அன்று மகாத்மா காந்தி சொன்னது.
எப்போது ஒரு பெண்ணால் இரவில் தனியாக வீதியில் நடக்க முடிகிறதோ அன்று கிடைக்கும் சுதந்திரம் என்று. அதை நீருபித்து விட்டனர் தமிழக இளைஞர்கள். கிடைத்தது சுதந்திரம் தமிழ கத்திற்கு.