ஆன்லைன் புக்கிங்.. கோடி கணக்கில் மோசடி செய்த பெண் !

தாய்லாந்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவின் விர்ஜினியா வில் வேலை செய்து வந்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்களின் விலை மதிப்பு மிக்க கைப்பைகளை ஆன்லைன் மூலம் வாங்குவார்.
ஆன்லைன் புக்கிங்..  கோடி கணக்கில் மோசடி செய்த பெண் !
அவ்வாறு ஆர்டர் செய்த கைப்பையைப் போல அச்சு அசலாக சீனாவில் இருந்து போலி கைப்பைகளை வாங்கி வைத்திருப்பார். 

தான் ஆர்டர் செய்த ஒரிஜினல் பை கைக்கு வந்தவுடன் பிடிக்க வில்லை என்று, போலி பையைத் திருப்பி அனுப்பி வைத்து விடுவார்.

அந்த நிறுவனமும் பைக்குரிய பணத்தை மீண்டும் அவர் வங்கிக்கே திருப்பிச் செலுத்தி விடும். ஒரிஜினல் பைகளை ஆன் லைனில் நல்ல விலைக்கு விற்று விடுவார். 

அமெரிக்காவின் 12 மாகாணங் களில் இப்படிப் பைகளை வாங்குவதும் போலி பைகளை அனுப்பி வைப்பதுமாக இருந்திருக்கிறார்.

இதற்காக 16 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ருக்கிறார். கோடிக் கணக்கில் பணம் புரண்டது. 

ஒரு கட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் டி.ஜே. மாக்ஸ் நிறுவனம் பிரபிட்சாவின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்து விட்டது.
காவல் துறையின் உதவியோடு அதிரடியாக பிரபிட்சாவின் வீட்டுக்குள் நுழைந்த போது 572 கைப்பைகளைக் கைப்பற்றினர். இதில் ஒரிஜினல் பைகளும் போலி பைகளும் கலந்திருந்தன.

டி.ஜே. மாக்ஸ் நிறுவனத்தில் மட்டும் 226 கைப்பைகளை வாங்கி, போலி பைகளை அனுப்பி வைத்து இருந்தி ருக்கிறார். இதன் மூலம் பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் பெற்றிருக்கிறார். 

வசமாக மாட்டிக் கொண்ட அந்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். விசாரணையில் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.
இவர் குழந்தையிலிருந்து பெற்றோரால் மனத்தாலும் உடலாலும் மிக மோசமாக நடத்தப் பட்டதினாலும், மன நோயால் பாதிக்கப் பட்டிருப்ப தாகவும் அவரது வக்கீல் நீதிமன்றத்தில் கூறியிரு க்கிறார்.

இதனை தொடர்ந்து 30 மாதங்கள் சிறைத் தண்டனையும், ஏமாற்றிய வர்களுக்கு உரிய பணத்தையும் கொடுத்து விட வேண்டும் என்று கூறியிருக் கிறது நீதிமன்றம்.
Tags:
Privacy and cookie settings