மும்பை தானே பகுதியில் இயங்கி வரும் பிரபல சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவ மனையில் டாக்டராக சஞ்சய் பரன்வால் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஜன.6ஆம் தேதி, ஆப்ரேஷன் தியேட்டரில், சுமார் 45வயது மதிக்கத்தக்க நபரின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு இருந்திக்கிறார்.
அப்போது அறையில் இருந்து கரப்பான்பூச்சிகளை கண்ட டாக்டர், ஆப்ரேஷனை நிறுத்தி விட்டு கரப்பான் பூச்சியை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் நோயாளியின் நலன்கருதி உடனடியாக மீண்டும் சிகிச்சையை துவங்கிய மருத்துவர் அதனை வெற்றிகரமாக செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவ மனை டீனிடம் கரப்பான்பூச்சி இருந்த வீடியோவை காட்டி மருத்துவ மனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து புகார் அளித்தி ருக்கிறார்.
ஏற்கனவே கடந்த மாதம் இந்த பூச்சி தொல்லைப் பற்றி பல்வேறு புகார்கள் செய்தும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று கூறியி ருக்கிறார்.
மேலும் அறுவை சிகிச்சை அறைகள் ஒழுங்காக சுத்தம் செய்யப்படாததால், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக கூறினார்.
கடந்த மாதங்களில் 25% நோயாளிகள் அசுத்தம் காரணமாக தொற்று நோயால் பாதிக்கப் பட்டனர் என்று அவரு குறிப்பிட் டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு, அறுவை சிகிச்சை அறைகளில் தொற்று பரவாமல் இருக்க சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.
இருப்பினும், மருத்துவ மனையின் நிர்வாக கவனக்குறைவு காரணமாக இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது பணியாட்கள் குறைவாக இருப்பதால் அந்த அறுவை சிகிச்சை அறைகள் பயன்பாட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளன.
செயல்பாட்டில் இருக்கும் அறுவை சிகிச்சை அறைகளும் முறையாக சுத்தம் செய்யப் படாமல் இருப்பதாக மருத்துவர்கள் சிலர் குற்றம் சாட்டி யுள்ளனர்.