சென்னையில் ஜல்லிக்கட்டு கோரி அறவழியில் மாணவர்கள் போராடி கொண்டிருந்த நிலையில் திடீரென்று கூட்டத்தில் நுழைந்து மாணவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் கண் மூடித்தனமாக தாக்கி யுள்ளனர்.
இந்த போராட்டம் அமைதியாக நடை பெற்றதை போராட்டக் களமாக போலீசாரே திட்டமிட்டு மாற்றி யுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை ஓட ஓட விரட்டியடித் துள்ளனர்.
பெண் போலீசார், மற்றும் ஆண் போலீசார்கள் ஆட்டோ, குடிசைகளுக்கு தீ வைத்தது.
இதனையடுத்து மீனவ குடியிருப்பில் அத்து மீறி நுழைந்து கண்ணில் பட்டவர்களை தாக்கியது மட்டும் இல்லாமல் வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.
போலீசாரின் அராஜக செயல் காட்சிகள் நாடு முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் தனி வழக்காக தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டுள்ளார்.
இதனால் போலீசார் செய்த குற்றங்கள் இந்த வழக்கு மூலம் வெளியில் தெரியவரும் என்று பொதுமக்கள், மற்றும் வழக்கறிஞர்கள் தெரிவித் துள்ளனர்.