போலீஸ் அராஜகம் ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. பலா் மாணவா்கள் அளவு மீறி இருக்கக் கூடாது என்று எண்ணினா். 
போலீஸ் அராஜகம் ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை?
இந்த நிலையில் நேற்று மதியம் இணையதளம் மற்றும் டிவிக்களில் அதிர்ச்சி வீடியோக்கள் ஒடியது.

காவல் காக்க வேண்டிய காவல் துறையினரே அவா்களது வாகனத்திற்கு தீ வைப்பதும், பெண் போலீஸ் ஒருவா் வீட்டைக் கொளுத்துவதும், மன நலம் சரியில்லாத வரை மாட்டை அடிப்பது போல் காவல் துறையினா் அடிப்பதும்,

தகவல் சேகரிக்க சென்ற ரிப்போர்ட்டா்களை அடித்ததும் என எல்லை மீறி காவல் துறையினா் செயல்பட்டனா். அது வெட்ட வெளிச்சமானது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் 
மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, சென்னையில் நடைபெற்ற வன்முறையில் காவல் துறையினரே அத்து மீறியுள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறினார்கள்.

மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் மநகூ தலைவர்கள் வெளியிட்டனர். 

வன்முறையை நியாயப்படுத்த போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சென்னை கலவரம் குறித்தும் போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் மநகூ சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், காவல் துறையினரின் அத்து மீறலை கண்டித்து ஜன. 28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்றும் மநகூ தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் வீடுகளுக்கு தீ வைத்த மற்றும் வாகனங்களுக்கு தீவைத்த போலீசாருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings