சேலம் மாவட்டம் ஒமலுரில் பணியாற்றும் போலீஸ் வெங்கடேஷ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஈரோடு செல்ல திட்டமிட்டு டூவீலரில் நான்கு பேரும் சென்றனர்.
எடப்பாடி, கொங்கணாபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் வெங்கடேஷ் உட்பட குடும்பத்தினர் நான்கு பேரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இந்த கோர விபத்திற்கு காரணம், டூவீலரில் நான்கு பேர் பயணம் செய்தது, ஹெல்மெட் அணியாதது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸாரே, விதிமுறை மீறி, ஹெல்மெட் அணியால் செல்லலாமா என கேள்வி எழுந்துள்ளது.