ஜல்லிக் கட்டுக்காக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
அப்போது போராட் டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி
சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே போலீசார் குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஏராளமான 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் போலீசார் அங்கு குவிக்கப் பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் சிதறியோடினர்.
அப்போது பல பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கை வைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் பரபரப்பை கிளப்பி யுள்ளார்.