ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு மாணவர்க ளிடம் ஒரு எழுச்சி மற்றும் தன்னம்பி க்கையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அப்படியே அரசியல் சக்தியாக மாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர்.
அவர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த நினைக் கின்றனர்.
மேலும் ஸ்டாலினும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், மோடியும் வேண்டாம், ராகுலும் வேண்டாம்.
இவர்கள் அனைவரும் பீட்டா விடம் விலை போனவர்கள் 234 தொகுதியிலும் காளை மாட்டு சின்னத்தில் போட்டியிட மாணவர்கள் போட்டியிட வேண்டும்.
சகாயம் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு. சகாயம் அல்லது ராகவா லாரன்ஸ் முதல்வர் வேட்பாளர் ஆக வாய்ப்பு.
இதன் மூலம் இனி டெல்லியை போல தமிழகமும் லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலம் ஆக வாய்ப்பு உள்ளது சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.