ஜல்லிக்கட்டிற்கான தடைய நீக்க கோரி கோவில் பட்டியில் 4வது நாளாக பயணியர் விடுதி முன்பு மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தமால் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள்,
இளைஞர்கள் கடந்த 6 நாள்களாக தன்னெழுச் சியாக எவ்வித அரசியல் கட்சிகளையும் அனுமதிக்கமால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில்பட்டியில் வாடஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலை தளங்கள் மூலமாக ஒருங்கிணைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணியர் விடுதி முன்பு கடந்த 4 தினங்களுக்கு முன்பு தங்கள் போராட்டத் தினை தொடங்கினர்.
ஆரம்பத்தில் குறைவாக இருந்த மாணவர்கள் நேரம் நேரம் ஆக,ஆக குவியத்த தொடங்கினர்.
நேற்று வரை சுமார் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோவில்பட்டி நகரத்தினை ஸ்தம்பிக்க வைத்தனர்.
கோவில்பட்டி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்ட த்தில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று மாணவர்கள் மட்டுமின்றி, குடும்ப பெண்கள், குழந்தைகள், முதிய வர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் மாணவர்க ளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாணவ ர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பில் வணிகர்கள், தீப்பெட்டி தொழிற் சாலைகள் மூடப்பட்டன.
வெயில், பனி இருந்த நிலையில் இன்று காலையி லிருந்து லேசாக மழை பெய்து வருகிறது. இதனையும் பொருட்படுத்தமால் மாணவர்கள் 4வது நாளாக தங்களது போராட்ட த்தினை தொடர்ந்து வருகின்றனர்.
கோவில் பட்டியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்தாலும், மாணவர்கள் போக்கு வரத்து நெருங்கடி ஏற்படாமல் இருக்கும் வகையில் அவர்களே பணியாற்றி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுக்கு கோவில்பட்டி நகரைச் சேர்ந்த தன்னார்வ நபர்கள் உணவு, குடிநீர், குளிர்பானம் என அனைத்து தேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
போராட்டத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரியம், தமிழ் கலச்சாரம், விவசாயம் என பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து உரையாற்றப் படுகிறது.
மாணவர்களை விட மாணவிகள் பேசும் பேச்சுகள் அனைவரின் கவனத் தினையும் ஈர்த்து வருகிறது.
மாணவர்களின் போராட்டத்திற்கு பொது மக்கள் மட்டுமல்லாது திருநங்கைகளும் ஆதரவு தெரிவித்து, நேற்று பீட்டாவுக்கு எதிராக பாடைகட்டி ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில்பட்டியில் நடைபெற்று இந்த மாணவர்களின் போராட்டம் வெறும் போராட்டமாக இல்லாமால் ஒரு திருவிழா போன்று காட்சி யளிக்கிறது. கோவில் பட்டி நகரில் பெரிய திருவிழாவான செண்பக வல்லியம்மன் கோவில்
சித்திரை திருவிழாவினை போன்று மாணவ ர்களின் போராட்டம் மக்களுக்கு நினைவுப் படுத்தி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் கோவில்பட்டி நகர மக்களின் ஒற்றுமை க்கான வடிகாலாக அமைந்துள்ளது என்றால் மிகையாகது.