சசிகலாவை புகழும் பாண்டே மர்மம் என்ன?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தந்தித் தொலைக்காட்சியை பார்ப்பவர் களின் காதுகளில் ரத்தம் வருகிறதாம். 
சசிகலாவை புகழும் பாண்டே மர்மம் என்ன?
காரணம் அந்த தொலைக் காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கும் பீகாரின் மைந்தன் ரங்கராஜ் பாண்டே சசிகலாவுக்காக அடிக்கும் ஜால்ரா சத்தம் தான்.

1989 -ஆம் ஆண்டு தேர்தல் முதல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சசிகலா தான். சசிகலாவால் மட்டும் தான் அதிமுகவை கட்டுப்கோப்பாக நடத்திச் செல்ல முடியும்.

சசிகலா நல்லவர்… ஜெயலலிதாவுடன் இருந்ததால் தான் அவர் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இப்படியாக சசிகலாவை புகழ்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டே இருக்கிறார். 

அது மட்டுமின்றி, சசிகலாவை எதிர்ப்பவர்களை மட்டம் தட்டும் வகையில் பொய்யான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்.

இதற்கெல்லாம் காரணம் வெறும் பணமும், வெளியில் சொல்ல முடியாத சில சலுகைகளும் தான் என்று நினைத்தால் நீங்கள் ஒரு அப்பாவி.

ஆட்சித் தலைமையையும், அதிமுக தலைமை யையும் ஒருசேர கைப்பற்ற வேண்டும் என்று நினைப் பவர்கள் வளைத்துப் போட்டிருக்கும் 

ஊடகவிய லாளர்களில் முக்கியமா னவர்கள் தந்தி தொலைக் காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவும், 
புதிய தலைமுறை செய்தித் தொலைக் காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனும் முதன்மை யானவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 4-ஆம் தேதி மாலை ஜெயலலிதா வுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், நடந்த உண்மை வேறு. அந்த உண்மையை மறைத்து செய்திகள் வர வேண்டும் என்பதற்காக அன்று நள்ளிரவில் பாண்டேவும், கார்த்திகைச் செல்வனும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். 

அங்கு அவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டுள்ளது என்று தகவலறி ந்தவர்கள் கூறுகின்றனர். அதன் படியே இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 5-ஆம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாக தந்தி தொலைக் காட்சியில் பொய்யான செய்தி வெளியிடப் பட்டது கூட, 

அப்படி ஒரு செய்தி வெளியானால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப் பட்டது தானாம்
Tags:
Privacy and cookie settings