பி.வி.சிந்து, விராட் மற்றும் பலருக்கு அரசின் விருதுகள் !

இந்திய அரசு ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர் களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளை அளித்து வருகிறது. அதனடிப் படையில் இந்த வருடம் விருது வாங்குவோரின் பெயர்களை அறிவித் துள்ளது.
பி.வி.சிந்து, விராட் மற்றும் பலருக்கு அரசின் விருதுகள் !
இதில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித் துள்ளது. இவர் 2016 ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 

இந்தியாவில் இருந்து ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமைக் குரியவர்.

தற்காப்பு கலையில் சிறந்து விளங்கிய (களரிப்பயட்டு) மீனாட்சி அம்மாளுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. மேற்குவங்கம் தீயணைப்பு வீரர் பிபின் கந்தராவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித் ள்ளது.

2015 – இல் நடைபெற்ற பார்வைத்திறன் குறைவு அடைந்தவர் களுக்கான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 

அப்போதைய பயிற்சியாளர் சேகர் நாயருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித் துள்ளது. பாலியல் தொழிலுக்காக அனுப்பப்பட்ட 12000 பேரை மீட்ட அனுராதா கொய்ராலாவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித் துள்ளது. 
கிரிக்கெட் வீரர்களான டோனி மற்றும் கோஹ்லி இந்திய அரசு பத்ம விருது அறிவித் துள்ளது.

2016 ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித் துள்ளது. இவருடைய பயிற்சியாளர் கோபி சந்துக்கு இந்திய அரசு பத்ம விருது அறிவித் துள்ளது.

முரளி மனோகர் ஜோஷி,பாடகர் யேசுதாஸ் ,ஜக்கி வாசுதேவ் ஆகியோர்க்கு இந்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித் துள்ளது. மறைந்த பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமிக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings