தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தை யடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அவர் அந்த பொறுப்பை ஏற்று கொள்ள தகுதி இல்லை.
அ.தி.மு.க.,வில் 5 வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என கட்சி விதியில் உள்ளது.
என ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவை ஒரு மனதாக பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கபட்டு விட்டதால்,
இந்த மனுவை தொடர்ந்து விசாரணை செய்ய இயலாது என கூறி, மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் நீதிமன்றத்தில் சசிகலா வெற்றி பெற்றார், சசிகலா புஷ்பா தோல்வி யடைந்தார்.