குடும்பத்தை பிரித்த ஐஸ்வர்யா ராய் !

ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே அடிக்கடி நிகழும் சண்டையால் அமிதாப்பச்சன் குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தை பிரித்த ஐஸ்வர்யா ராய் !
அமிதாப், ஜெயா பச்சன் இருவரும் பிரிந்து தனித்தனி வீடுகளில் வசித்து வருவதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமான சமாஜ்வாடி அமர்சிங் கூறியுள்ளார்.

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு மருமகளாக சென்றார் ஐஸ்வர்யா ராய்.

அன்று முதல் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே மனவருத்தம் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

கணவர் அபிஷேக்குடன் ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்பட்ட பிரச்சனையைவிட, மாமியார் ஜெயா பச்சனுடன் ஏற்பட்ட பிரச்சினையே அதிக அளவில் ஊடகங்களில் வெளியாகின.

மாமியார் சொல்பவற்றை ஐஸ்வர்யா ராய் கேட்காததால், கூட்டுக்குடும்பமாக இருந்த குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், தனது கணவரை விட்டு ஜெயா பிரிந்துசென்று விட்டார்.

அதனால் தற்போது இருவரும் தங்களுக்கு சொந்தமான வேறு வேறு பங்களாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை சமாஜ்வாடி கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அமர்சிங் கூறியுள்ளார். இவர் அமிதாப்பச்சனின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings