அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் எதாவது ஒரு நாட்டிற்கு சிறிய அளவிலாவது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் அவர் அமெரிக்காவின் நலன்களை கருதி ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இனி விசா கிடையாது என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.
இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது எனவும்
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 6 சிரியர்கள், ஒரு யேமேனியர் உள்ளிட்ட ஏழு பேர் அமெரிக்காவிற்கு செல்ல விருந்தனர்.
அவர்களிடம் அமெரிக்க செல்வதற்கு உரிய விசா இருந்தும் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த விமான அதிகாரி ஒருவர் கூறுகையில், தாங்கள் அவர்களை ஏற்றிச் சென்று விடலாம்,
ஆனால் அங்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகத்தின் பேரிலே இது போன்று செய்ததாக கூறியுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவில் ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மூன்று மாத காலம் தடை விதிக்கப் பட்டுள்ளது.
அப்படி இருக்கையில் தாங்கள் எப்படி ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அதிரடி அறிவிப்பு நேற்று மாலை 4.30 மணியில் இருந்து அமலுக்கு வந்து விட்டதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற நிலைமைக்கு நாங்கள் தள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் மட்டுமே இவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும்
இதனால் இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அமெரிக்கா செல்வதாக இருந்த ஏழு பேருமே அமெரிக்க செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இவை அனைத்தும் டிரம்ப் அறிவித்த சில மணி நேரத்திற்குள் நடந்தவை என்று கூறப்படுகிறது.