ஒரு வழியாக தமிழ் நாட்டில் தளபதி சகாப்தம் துவங்கப் போகிறது. இது வரை கலைஞர் மட்டும் தான் தளபதிக்கு வழி விட மறுத்து வந்தார்.
பேராசிரியரும் தனது பொதுச்செயலாளர் பதவியில் விடாப்பிடியாக அமர்ந்து வந்தார். கலைஞர் இரண்டாம் முறையாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தொண்டை வழியாக மூச்சு விடும் வசதி பொருத்தப் பட்டது.
பேச்சுத்திறன் குறைந்து விட்டது என்கிறார்கள். ஞாபக மறதியும் கடுமையாக இருக்கிறது சொந்த பிள்ளைகளைக் கூட அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
இந்த சூழலில் நாளை திமுகவின் பொதுக்குழு கூடுகிறது. கலைஞர் பேசுவாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
மூத்த மகள் செல்வி மூலமாக கலைஞரிடம் தளபதியின் தலைமைப் பொறுப்பைப் பேசி கிட்டத்தட்ட சம்மதம் வாங்கி விட்டார்கள்.
துரைமுருகன், எ.வ.வேலு, மா.சு. போன்றவர்கள் பேராசிரியரிடம் பேசி விட்டார்கள். இனி பொதுக்குழுவில் தளபதிக்கு மகுடம் சூட்டுவது மட்டுமே பாக்கி.
அதுவும் நாளை பொதுக்குழுவில் நடந்து விடும் என்று முடிவாகி விட்டது. அப்படி தளபதி தலைவர் ஆனால் தமிழ் நாட்டில் ஸ்டாலின் சகாப்தம் துவங்கும்.
தளபதியை எதிர்க்க ஜெ., போன்ற வலுவான தலைவர்கள் இல்லை என்பதால் மிக விரைவாக முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்கிறார்கள்.
இன்னும் இளைஞன் போலேவே பரபரவென்று இருக்கும் தளபதியின் ஆட்சியைக் காண மக்கள் தயாராக இருக்கிறார்கள்.