சின்னத் தம்பியில் குஷ்புவின் அண்ணனாக நடித்தவர் உதய பிரகாஷ். இவர் பிறந்தது ஊட்டியில். மணிகண்டனாக 1964-ல் பிறந்தவர். 1990-ல் தெலுங்கு திரைத் துறையில் விஜயசாந்தி ஐபிஸ் படத்தில் அறிமுகமாகி நடித்தார்.
அதன் பின் வெகு பிரபலமானார். அடுத்த சூப்பர் ஹிட் படமான சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் அண்ணன். கிட்டத்தட்ட 29 படங்கள் நடித்தார்.
அதில் அறிமுகமான தெலுங்கு படத்தையும் சேர்த்து மொத்தம் 2 தெலுங்கு படங்கள் தான். மிச்சம் எல்லா படங்களும் தமிழில் தான்.
உதய பிரகாஷுக்கு என்று ஒரு உடல்மொழி. அவரின் நடிப்பு வில்லத்தனமான கேரக்டர் ஆர்டிஸ்டுக்கு அத்தனை பொருத்தம். பிரபலமாக வளர்ந்து வரும் போதே அவருக்கு குடிப்பழக்கம் வந்து விட்டது.
நல்ல நல்ல வாய்ப்புகள் வந்த போதும் தன் குடிப்பழக்கத்தால், ஷூட்டிங் வருவது இல்லாமல், குடித்து விட்டு வீட்டிலேயே விழுந்து கிடைக்க ஆரம்பித்தார்.
கடன் வாங்கி குடித்ததினால், கடன் அதிகமாகி, சினிமா வாய்ப்புகளும் இல்லாமல், சென்னையை விட்டே அவர் செல்ல நேரிட்டது.
அப்புறம், ஒரு குடிசையில், ஒரு மூதாட்டி பரிவு காட்டி அவ்வப்போது உணவு கொடுக்க அங்கேயே இருந்து வந்தார். மீடியா இவரின் இந்த நிலையை எழுதி, நடிகர் சங்கம் அவருக்கு புது வாழ்வு தர முயற்சி செய்தது.
நடிகர் சரத்குமார், அவரது படம் திவான் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதனால், உதய் பிரகாஷ் மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன் என்று மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார்.
ஆனாலும், அவரால், தன் பழைய பழக்கத் திலிருந்து மீள முடியவில்லை. மீண்டும் குடிக்க ஆரம்பித்தார். கல்லீரல் கெட்டுப் போனது. மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
இயக்குநர் பி வாசுவின் சகோதரர் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்தார். ஆனால்,18 ஆகஸ்ட் 2004, உதய் பிரகாஷ் மருத்துவ மனையை விட்டு வெளியே வந்து குடிபோதையில் நடிகர் சங்க கட்டிடம் செல்லும் வழியிலேயே சரிந்து விழுந்து இறந்தார்.
நடிகர் நெப்போலியனும், பி.வாசுவும் அவரது உடலை அவரது பிறந்த ஊரான ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
உதயபிரகாஷ் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவரது மச்சினர் சுப்பிரமணி, அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும், தன் குடி பழக்கத்தால் கொடூரமாய் மரணம் அடைந்தார் உதய பிரகாஷ்.